ஆலோசனைகள் யாருடையதாகவும் இருக்கலாம்... முடிவுமட்டும் உங்களுடையதாக இருக்கட்டும்...

01. EQUITY, COMMODITY, CURRENCY A/C OPENING CHARGES = FREE .....

02. YEARLY A/C MAINTANANCE CHARGES = FREE .....

03. TRADING FACILITIES = ONLINE AND OFFLINE FACILITIES .....

04. ONLINE TRADING SOFTWARE = FREE .....

05. TRADING CALLS = FREE .....

06. TRADING BROKERAGE = LOW AND YOUR CHOICES .....

07. AFTER TRADING CONFIRMATION = SMS AND E-MAIL .....

08. OTHER HIDDEN CHARGES = NIL .....

09. PAYOUT DETAILS = CLEAR IN NEXT DAY .....

10. BACKOFFICE FACILITIES = ONLINE FREE .....

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
வணக்கம் நண்பர்களே ...

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு"
                    
                       ... இந்த மண்ணுலகில் நன்கு வாழ்வதற்கு பொருள் தேவை, அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக கருதி, கடைபிடிக்க வேண்டும். அதற்கு நன்கு பொருளீட்டும் பொருள்சார் விழ்ப்புணர்வு(Financial Awareness) மிகவும் அவசியம். 
                     

                       படித்தவர்கள் வேலையில்லா திண்டாட்டத்திலும் , தொழில் முனைவோர் மின்சார தட்டுபாட்டிலும் , ஒரு சிலர் சேர்த்த பணத்தை, 30% வட்டி , 40% வட்டி அல்லது மூன்று மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்று கூறும் மோசடி பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாற்றமடைவதிலும் சிக்கி கொண்டு திணறுகிறார்கள். 

பணத்தை சம்பாதிக்க ஒரு துணை வழி... அது தான் Share Market ...

Share Market -ஆஹா ... இது ஒரு சூதாட்டம் ... இதில் பணத்தை விட்டவர்கள் தான் அதிகம் ... பணம் சம்பாதிப்பவர்கள் அரிது... என்கிறிர்களா... அதுதான் முட்டாள்தனம் ... 

Share Market ( Equity , Commodity and Currency Trading ) -இல் ஒரு Trade -லேயே அதிக இலாபத்தை எதிர்பார்பவர்களும் மற்றும் Trading நிலவரம் தெரியாமல் Trade செய்பவர்களும் - இந்த Share Market -இல் தோற்றவர்களே...

வாரத்தின் 5 நாட்களும் 10 am முதல் 11.30 pm...  சனிக்கிழமை மட்டும் 10 am முதல் 2.00 pm மணி வரை மட்டும் சந்தை வர்த்தகமாகும். ஞாயிறு விடுமுறை. எனவே நாள் முழுவதும் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. 


பணிபுரியும் அலுவலர்கள், பெண்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்கள் ஒய்வு நேரமான 4 மணிக்கு மேல் ஈடுபட்டு லாபம் ஈட்ட சரியான வாய்ப்பு உள்ளது.

கடைகள் வைத்திருப்போர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர் மிக எளிதாக இந்த வர்த்தகத்தில் இருக்கும் இடத்திலிருந்தே வர்த்தகம் செய்து பொருள் ஈட்டலாம்.

வீட்டிலிருந்து மட்டுமல்ல எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களிடம் ஒரு கணினி, இணையதள (Internet) இணைப்பு இருந்தால் போதும்,
*எங்கள் பயிற்றுனர் குழு உங்களுக்கு, உங்கள் வீட்டிலேயே வந்து பயிற்றுவிக்கும், அதற்கு கட்டணம் எதுவும் இல்லை,
*கணினி மூலம் வர்த்தகம்
*மொபைல் போன் மூலம் (GPRS or JAVA)
*ஸ்மார்ட் போன் மூலமாக (ANDROID)
*டேபி லேட், மூலமும் நீங்கள் எங்கு இருந்தாலும் வர்த்தகம் செய்யும் வசதி உள்ளது.
எங்கள் அலுவலகம் வந்தும் செய்யலாம் (OR) ஒரு தொலைபேசி வாயிலாக எங்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டு வாங்கலாம் விற்கலாம் தங்கள் கணக்கில்... அலுவலகம் 9 am முதல் 12 pm வரை இயங்கும்.

C  SANKAR IYAPPAN     mobile no.:  99431 89435    e-mail :  iyapuli@gmail.com

Share Market ( Equity , Commodity and Currency Trading ) - உலக அளவில் அன்றாடம் நிகழும் பொருளாதார சூழ்நிலைகளை உள்ளடக்கியது. இவற்றின் தன்மைகேற்ப Trading செய்து அதன் மூலம் இலாபம் அடைய வாழ்த்துக்கள் ...

பங்கு சந்தை பகவான் ...

வாரன் பஃபெட் 20-21ம் நூற்றாண்டுகளின் பங்கு சந்தை பகவான். பல வருடங்களாக உலகின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவர். சில வாரங்களுக்கு முன்புவரை உலகின் பெரும்பணக்காரர் பதவியை பில் கேட்ஸிடம் இருந்து பிடித்து வைத்திருந்தவர்.

அமெரிக்காவில் வங்கிகளும், Investment Banks என்று அறியப்பட்ட நிதித்துறை நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து கொண்டிருக்கையில், அமெரிக்க டாலர் 5 பில்லியன் முதலீடு செய்து இன்னொரு பெரிய நிதி நிறுவனமான “கோல்ட்மேன் சேக்ஸ்” என்ற நிறுவனம் விழாமல் முட்டுக் கொடுத்தவர்.

Berkshire Hathaway என்ற நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரர். பல ஆண்டுகளாக வியாபாரத்துக்காக பணம் வேண்டியோ, போனஸ் என்று பொய்யான இலவசமாகவோ இந்த நிறுவனத்தின் பங்குகளை வெளியிடாதவர். Berkshire Hathaway நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை 84,500 அமெரிக்க டாலர்கள். (ஒரு பங்கின் Face Value எனப்படும் முகப்பதிப்பு வெறும் ஒரு டாலர் மட்டுமே).

இந்த விலையே (US $ 84,500) தற்போதைய சந்தை கலவரத்தால்தான். டிசம்பர் 2007ல் ஒரு பங்கின் மதிப்பு US $ 150,000க்கும் மேல்.

வெளியில் தெரிந்த சொத்து மதிப்பு கணக்குப்படி வாரன் இப்போது உலகின் இரண்டாவது பெரும் பணக்காரர். [வெளியில் தெரியாததை கணக்கெடுத்தால், பெரும்பணக்காரர்கள் பட்டியலில் சில இந்தியர்களும், தமிழர்களும் இருக்கலாம் ].

அவ்வளவு பணம் வைத்திருந்தாலும் பஃபெட் நெ.1 எளிமையானவர், நேர்மையானவர்.

அவருடைய அலுவலகம் இருக்கும் இடம் அமெரிக்காவில் ஓமஹா என்கிற பகுதி. அதனால், வாரன் பஃபெட் Oracle of Omaha என்ற பெயராலும் அறியப்படுகிறார்.

பங்கு சந்தையில் சராசரிக்கு சற்று அதிக அறிமுகம் உள்ள எவருக்கும் வாரன் பஃபெட் ஒரு ஆதர்ச நாயகன். அவரைப் போல முதலீடு செய்யவேண்டும் என்று அலையும் உலகளாவிய பெருங்கூட்டம் இருக்கிறது. யாஹூ குழுக்களில், இந்தியர்களால் நடத்தப்படும் ஒரு குழுவின் பெயர் La Warren Buffet .

தன் வாழ்வின் முதல் பங்கு முதலீடு செய்தபோது வாரனின் வயது பதினொன்றுதான். அதுவே லேட் என்கிறார் வாரன். சேமிப்பு, முதலீடு ஆகியவை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்கப்பட வேண்டும், கற்க வேண்டும் என்பது வாரனின் கோட்பாடு.
அவரை பற்றிய சில தகவல் துளிகள்:

1. பதினோரு வயதில் முதலீடு செய்யத் துவங்கிய வாரன், பேப்பர் போட்டு சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு பண்ணையை வாங்கினார். அப்போது அவர் வயது, பதினான்கு மட்டுமே.

2. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரராக இருந்த போதிலும், இன்னும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு வாங்கிய மூன்று படுக்கையறை வீட்டில்தான் இன்னும் வசிக்கிறார். (”இது போதும் எங்களுக்கு; வாழத்தேவையான எல்லாம் இங்கு இருக்கின்றன”)

3. காருக்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. தானே எங்கும் ஓட்டிச் செல்லுகிறார்.

4. உலகின் மிகப்பெரிய தனியார் ஜெட் விமான கம்பெனியின் உரிமையாளராக இருந்தாலும், பணம் செலவழிக்க முடிந்தாலும், சாதா விமானத்திலேயே பயணம் செய்கிறார்.

5. அவருடைய “Berkshire Hathaway” என்ற நிறுவனம், 63 மிகப்பெரிய நிறுவனங்களை உள்ளடக்கியது. இருப்பினும், அவர் இந்த நிறுவனங்களின் மேலாளர்களுடன் அடிக்கடி மீட்டிங் போடுவதில்லை. ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் ஒரே ஒரு கடிதம் - “வருடத்திற்கான் குறிக்கோள்கள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன” இவ்வளவுதான். (”மீட்டிங் போடுவது காலவிரயம்”)

6. தன் நிறுவனத்தலைவர்களிடம் அவர் அறிவுறுத்துவது ஒன்றே ஒன்றுதான்: ”முதலீட்டார்களின் பணத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்”

7. வேலை முடிந்து வீடு திரும்பியதும் வாரனின் பொழுதுபோக்கு பாப்கார்ன் சுவைத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது. பார்ட்டிகளுக்கு செல்வது, மேல்தட்டு மக்களுடன் ஆட்டம் போடுவது போன்றவை அவருக்கு பிடிக்காதவை. இயல்பான, மிகையில்லாத வாழ்க்கை.

8. கொஞ்சம் சம்பாதிக்கும், நிறைய கடன் வாங்கும் நம்மில் பலர் அடிக்கடி அலைபேசி மாற்றுகையில், வாரன் ஒரு செல்போன்கூட வைத்துக்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான தகவல். அவர் அலுவலக மேஜையில் கணிப்பொறியும் வைத்துக்கொள்ளவில்லை.

வாரன் பஃபெட் தன்னுடைய நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எழுதும் ஆண்டறிக்கை மடல் மிகவும் புகழ் பெற்றது. அவற்றை http://www.berkshire-hathaway.com என்கிற வலைத்தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம் (அதற்கான உரல்கள் இந்தப் பதிவின் கடைசியில்).

ஒவ்வொரு வருடமும் அவருடைய மடல் ஏராளமானோரால் படிக்கப்படுகிறது. மற்ற எந்த நிறுவன அறிக்கையிலும் காணமுடியாத சில சிறப்புகள் அவருடைய மடல்களில் உண்டு.

தன்னுடைய நிறுவன சாதனைகளை பட்டியலிடுகையில், வாரன் அந்த நிறுவன உயர் அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டத் தவறுவதில்லை. அதே போல், தன்னுடைய முதலீட்டில் செய்த தவறுகளை நேர்மையுடன் சொல்லவும் தயங்குவதில்லை.

மிகவும் முக்கியமாக, அவருடைய வருடாந்திர அறிக்கையில் Graph, Chart என்று படமோ, பிலிமோ காட்டுவதில்லை. அவருடைய இயல்பான நகைச்சுவை மடல் முழுவதும் வியாபித்திருக்கும்.

முதலீடு செய்யும் வர்த்தகம் புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பது அவரது சித்தாந்தம். அதனாலேயே, அவர் மென்பொருள் மற்றும் இணைய சம்பந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை.

கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களில் அவருடைய நிறுவன பங்கின் மதிப்பு ஏறக்குறைய எல்லா வருடங்களிலுமே S&P 500 என்று அறியப்படும் அமெரிக்க பங்குசந்தை குறியீட்டு எண்ணின் ஏற்றத்தைவிட அதிகமாகவே இருந்திருக்கிறது.

1965ல் இருந்து கணக்கிட்டால், அவர் நிறுவன பங்கு அடைந்திருக்கும் ஏற்றம் (வாயைப்பிளக்காதீர்கள்) மூன்று லட்சம் சதவீதத்திற்கும் மேல். ஒப்பீட்டில், S&P 500 ஏற்றம் ஆறாயிரம் சதவீதம் மட்டுமே. இந்த பொருளாதார சரிவிலும் அவருடைய நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட குறைந்த சரிவையே சந்தித்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் அவர் பெரும்பாலும் அதை விற்பதே இல்லை. அப்படி பல ஆண்டுகளாக அவர் வைத்திருக்கும் பங்குகளில் சில, Gillette, American Express, Coca-Cola, Johnson & Johnson, Walmart, Procter & Gamble, Washington Post ஆகியவை. இந்த பட்டியலை பார்த்தாலே, எளிமையான, தினசரி உபயோகத்திலிருக்கும் பொருட்கள், சேவைகளை தரும் நிறுவனங்களில் அவர் முதலீடு செய்திருப்பது தெரியும்.

அவருடைய வலைத்தளமான http://www.berkshirehathaway.comல் உள்ள Corporate Governance பற்றிய ஆவணங்கள் அவருடைய நிறுவனத்தில் பின்பற்றப்படும் மேலாண்மை கட்டுப்பாடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள உதவுகிறது.

அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றும் எந்த நிறுவனத்திலும் முதலீட்டாளர்களுக்கு சத்தியமாக ஏமாற்றம் கிடைக்காது என்பது அந்த ஆவணத்தை படித்தாலே புரியும்.

”உங்களிடம் எங்கள் நிறுவனக்கொள்கைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வியாபாரம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் தொலைபேசிக்காக திருமணமாகாத கன்னிப்பெண்ணைப் போல காத்திருக்கிறேன்” என்கிறார்.

இதையே 2006 மடலில், ஒரு நகைச்சுவை துணுக்கை மேற்கோள் காட்டி -

”சூப்பர் மார்க்கெட்டில் தள்ளாத முதியவர் ஒருவர் தன் மனைவியை தவறவிட்டு தேடிக்கொண்டிருந்தார். தேடும் அவசரத்தில் அவருடைய ஷாப்பிங் வண்டி இவரைப்போலவே அவசரத்தில் இருந்த ஒரு இளைஞனின் வண்டி மீது மோதி விடுகிறது.

“ரொம்ப சாரி, தெரியாம இடித்துவிட்டது, அவசரத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது”

”ஆமாம், என் மனைவியை தேடிக்கொண்டிருக்கிறேன்”

இளைஞன் “நானும் அதேதான் செய்து கொண்டிருக்கிறேன். வாங்களேன் சேர்ந்தே தேடலாம்”

முதியவர் ”சரி. உங்கள் மனைவி எப்படி இருப்பாள்?”

”ஓ! அவள் மிக அழகி. இன்னிக்கெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். சாமியார் பார்த்தால் அவளிடம் மண்டியிடுவார். யாரவது வீட்டுக்குள்ளிருந்து அவளை பார்த்தால் ஜன்னலை உடைத்துக்கொண்டு அவளிடம் ஓடுவார்கள். போதாதற்கு இன்னிக்கு ரொம்ப டைட் டி ஷர்டும், ஜீன்ஸும் போட்டிருக்கிறாள்”.

“உங்கள் மனைவி எப்படி இருப்பாள்?”

முதியவர் “அதை விடுங்கள், நாம உங்க மனைவியை தேடுவோம்”

உங்களிடம் அந்த அழகான மனைவிபோல் பிஸினெஸ் இருந்தால் சொல்லுங்கள், என் அலுவலக ஜன்னலை உடைத்துக்கொண்டு ஓடுவருகிறேன் - என்கிறார்.

வாரனைப் போல ”தங்கத் தொடு கை (Golden touch)” கொண்ட முதலீட்டாளர் அடிக்கடி பிறப்பதில்லை. தேன் கூட்டை தொட்டுவிட்டே புறங்கை நக்குபவர்களிடையே, தேனாற்றையே வைத்துக்கொண்டு விரல் நுனிகூட அதில் படாமல் இருப்பவர் வாரன் பஃபெட்.

இதற்கெல்லாம் மேலாக தன் வாழ்நாளில் சேர்த்த அளப்பரிய செல்வத்தை பொது நலனுக்காக கொடுப்பவர்கள் மிகச் சிலரே.

வாரன் பஃபெட் 2006-ல் உலகின் மிகப்பெரிய நன்கொடையை அறிவித்தார். கிட்டத்தட்ட தன் முழு சொத்தையுமே நற்காரியங்களுக்காக எழுதிவைத்து விட்டார். (அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள் என்பது முக்கியம்) நன்கொடை செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறக்குறைய ரூ.1,58,100 கோடி).

உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸும், வாரனும் பலகாலம் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

”எங்களுக்குள் பொதுவான விஷயம் எதுவும் இல்லை” என்றே இருவரும் நினைத்தனர்.

முதல்முதலாக ஐந்து வருடங்களுக்குமுன் சந்திக்க நாள்குறித்த போது மொத்தம் 30 நிமிடங்களே ஒதுக்கினர். சந்திப்பின் போது ஒருவருக்கொருவர் பிடித்துபோய் சந்திப்பு பத்து மணி நேரமாக நீண்டது. இப்போது இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். அன்றிலிருந்து கேட்ஸ் - வாரனின் பக்தர்.

மேல்சொன்ன ரூ.158,000 கோடி கொடை கொடுக்கப்பட்டது Bill and Melinda Gates Foundation என்கிற தொண்டு நிறுவனத்துக்குதான். வாரனின் ஒரு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் கோடி பெருங்கொடையின் பாதுகாவலர் கேட்ஸ்.

இதற்கு பிறகு, அவரை பங்கு சந்தைக்கு மட்டும் பகவான் என்று கூறுவது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது.

இந்தியாவில் பல செல்வந்தர்கள் இதை செய்திருக்கிறார்கள். ஆயினும், தன் முழு சொத்தையோ அல்லது அதில் பெரும்பகுதியையோ கோவில்களுக்கும், தர்ம காரியங்களுக்கும் எழுதிவைப்பது என்பது எப்போதுமே உண்டு.

அதில் பெரும்பான்மை, வாரிசுகள் இல்லாததாலோ அல்லது வாரிசுகள் மேல் ஏற்பட்ட விரக்தியாலோ ஏற்பட்டதுதான். தற்காலத்தில் அப்படி செய்வது வழக்கொழிந்து விட்டது என்று தோன்றுகிறது.

வாரிசுகள் இருக்கும்போதே, மிகப்பெரிய செல்வத்தை நற்காரியங்களுக்குத் தர மிகப்பெரிய மனது வேண்டும். பாரி போல வாரி வழங்கியவர் வாரன்!

Useful Websites...

எங்களுடைய சிறப்பம்சங்கள் ...

01.  EQUITY, COMMODITY, CURRENCY  A/C OPENING CHARGES  =  FREE .....           

02. YEARLY A/C MAINTANANCE CHARGES  =  FREE .....      

03. TRADING FACILITIES  = ONLINE AND OFFLINE FACILITIES .....       

04. ONLINE TRADING SOFTWARE  =  FREE .....    

05. TRADING CALLS  =  FREE .....      

06. TRADING BROKERAGE  =  LOW AND YOUR CHOICES .....   

07. AFTER TRADING CONFIRMATION  =  SMS AND E-MAIL ..... 

08. OTHER HIDDEN CHARGES  =  NIL .....  

09. PAYOUT DETAILS  =  CLEAR IN NEXT DAY .....   

10. BACKOFFICE FACILITIES  =  ONLINE FREE .....

கரன்சி சந்தை ... CURRENCY MARKET

இன்றைக்கு கமாடிட்டி சந்தை போல, கரன்சி சந்தையிலும் டிரேடிங் செய்து லாபம் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிக ஏற்ற, இறக்கம் இல்லாத சந்தை இது என்பதால், பலரும் இதில் இறங்கி லாபத்தைச் சுவைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

இத்தனைக்கும் இந்தியாவில் கரன்சி சந்தை வர்த்தகம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள்தான் ஆகிறது. 2008-ல்தான் முதன்முதலாக இந்தியாவில் கரன்சி டெரிவேட்டிவ் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 ரூபாயைத் தாண்டியபோதுதான் கரன்சி வர்த்தகத்தின் மீது பலருக்கும் ஆர்வம் பிறந்தது.

அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென் ஆகிய நான்குவகையான கரன்சிகளை நம்மூரில் வர்த்தகம் செய்யமுடியும். இந்தியாவில் நடக்கும் கரன்சி வர்த்தகத்தில் சுமார் 85 சதவிகிதம் டாலரில் மட்டுமே நடக்கிறது. இதற்கு காரணம், டாலர் வர்த்தகத்தில் மட்டும்தான் ஆப்ஷன் நடக்கிறது. மற்ற நாடுகளில் 24 மணி நேரம் கரன்சி வர்த்தகம் நடந்தாலும் நம்மூரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கரன்சி வர்த்தகம் செய்யமுடியும்.


சிறுமுதலீட்டாளர்களும் செய்யலாம்!

சிறுமுதலீட்டாளர்கள் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த சந்தையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. கரன்சி சந்தையின் வர்த்தகம் பெரும்பாலும் செய்தியைப் பொறுத்துதான் இருக்கும். வதந்திகள் இல்லை என்பதால், அதிக ஏற்ற, இறக்கம் இருக்காது. கமாடிட்டி வர்த்தகம்கூட சப்ளை-டிமாண்டை பொறுத்து விலை மாறுபடும். ஆனால், கரன்சி சந்தையில் செய்திகள் மட்டுமே விலையை நிர்ணயிக்கும்.

பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைகளோடு ஒப்பிடும்போது கரன்சி சந்தையில் குறைவான மார்ஜின் செலுத்தினால் போதும். இதன் மார்ஜின் தொகை சுமார் 3 சதவிகிதம்தான். மேலும், கரன்சி சந்தையில் பெரிய அளவுக்கு ஏற்ற இறக்கம் இருக்காது. 2010-ல் சுமார் 5 பைசா என்ற அளவில்தான் ஏற்ற, இறக்கம் இருந்தது. இது இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது இச்சந்தையின் வால்யூமும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.

எவ்வளவு லாபம்?

ஒரு லாட் என்பது 1,000 டாலர்கள். ஒரு டாலர் 56 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 56,000 ரூபாய் ஒரு லாட். இதில் சுமார் 3 சதவிகிதம் அளவுக்கு மட்டும் மார்ஜின் செலுத்தினால் போதும். ஒரு பைசா உயர்ந்தால் 10 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை லாட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி, விற்கலாம். ஒரு நாளைக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். இதில் ரிஸ்க் குறைவு என்பதினால் கிடைக்கும் லாபமும் குறைவாகவே இருக்கும்.

கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும் ...

இதில் மார்ஜின் தொகை குறைவு என்பதால் கையில் இருக்கும் தொகை முழுவதற்கும் பொசிஷன் எடுக்கக்கூடாது.

மேலும், ஸ்டாப்லாஸ் போடாமல் பலரும் வர்த்தகம் செய்கிறார்கள். இதனால் அதிக இழப்பு வரலாம்.

உலக நிலவரங்கள், முக்கியமான டேட்டாக்கள் எப்போது வருகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

தங்கத்துக்கும், கரன்சிக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு மட்டும் வர்த்தகம் செய்தாலும், கிராஸ் கரன்சி என்று சொல்லக்கூடிய மற்ற நாணயங்களும் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோ கடுமையாக சரிந்தது. இதனால் அமெரிக்க டாலர் பலமடைந்தது. இந்த பலம் இந்திய ரூபாயின் வர்த்தகத்திலும் பாதிப்படைந்தது. அதனால் உலக விஷயங்களையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும்.

புதிய வாய்ப்பைத் தேடுகிறவர்கள் இதையும் ஒரு கைபார்க்கலாமே!

முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள் ...

TRADING IMPORTANCE :

01. முதலில் நீங்கள் ’’ முதலீட்டாளரா ?’’ அல்லது ’’தினசரி வர்த்தகரா?’’           என்பதை முடிவு   செய்யவும்.....             

02. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை   உணர்ந்தால்... தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று    உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....     

03. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை  தேர்ந்தேடுக்கவும்.....     

04. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள்    ( ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும் )   

05. அதிகமாக டிரேடிங் செய்வதை தவிருங்கள்...     

06. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து  கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ... உடனே கவர் செய்து விடுவார்கள் ..... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்..... 

07. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்....

08. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் ) 

09. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்... தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்.... 

10. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ...

Name of Online Trade...

MCX

Multi Commodity Exchange (MCX) is an independent commodity exchange based in India.  (Commodity Trade)

NCDEX

National Commodity & Derivatives Exchange Limited (NCDEX) is an online commodity exchange based in India. (Commodity Trade)

NSEL

National Spot Exchange Limited (NSEL) is a commodities exchange in India. (E-Gold, E-Silver..... Trade)

NSE

National Stock Exchange of India. (Equity Trade)

BSE

Bombay Stock Exchange of India. (Equity Trade)

MCX-SX

MCX Stock Exchange Limited (MCX-SX) of India. (Currency Trade)

நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!




நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு 
வணிகம்செய்கிறோம் . ( பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால் அல்லதுஅதிகரித்தல் ) .ஆதலால் கவனம் அதிகம் தேவை .

மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம், வெள்ளி , காப்பர் , அலுமினியம், கச்சா என்னை போன்ற முக்கியமான பொருட்களும் வணிகம் ஆகின்றன 

இந்தபொருட்கள் எல்லாம் உலக சந்தையில் வணிகமாகும் 
விலையின்அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . ( உதா ; கச்சா என்னை , தங்கம் ,வெள்ளி , போன்றவை அமெரிக்காசந்தையில் 
வணிகமாகும் விலையின்அடிப்படையில் தான் இங்கு வணிகமாகும் . 

அதே போல காப்பர் மற்றும்மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலை லண்டன் மற்றும் சீன சந்தைவிலைகளை பொறுத்து வணிகமகும் .

ஆகவே நமது கவனம் உலக சந்தைகளை பார்த்தபடியே இருக்க வேண்டும்.. அதுவும் கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின் துவக்க நேரம் தெரிந்துகொண்டு தவறாது கண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன் வணிகம்செய்தல் தான் கமாடிட்டி சந்தையில் லாபத்தினை ஈட்ட முடியும் ..

நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க சர்க்யுட் பில்ட்டர் 
உள்ளதுபோல கமாடிட்டி சந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால் 
நமதுசந்தையில் வணிகம் நிறுத்தப்படுவது போல அங்கு வணிகம் 
நிறுத்தமாட்டார்கள் தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர் அதிகப்படுத்துவர்கள் . 
அதற்க்கு 15நிமிடம் சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல் நிறுத்தப்படும் பின்னர்தொடர்ந்து வணிகம் ஆகும். 

தங்க டேட்டாக்கள்!.. GOLD DATAS...



தங்கத்தில் டிரேட் செய்கிறவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியவை...


முக்கிய நாடுகள், அதன் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது
அல்லது விற்பது.

தங்கத்தை உற்பத்தி செய்யும் முன்பே சுரங்க உற்பத்தியாளர்கள்         
ஹெட்ஜ் செய்வது.

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது.

பங்குச் சந்தையின் செயல்பாடுகள்.

விவசாயம் , காலநிலையைப் பொறுத்து உள்நாட்டில் டிமாண்ட்ஏற்படுவது.

அமெரிக்காவின் ஜி.டி.பி. குறைந்தால் அந்த நாட்டின் வட்டி விகிதமும்
குறையும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகமாக இருக்கும்.
முதலீடு அதிகமாகும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

அமெரிக்காவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தால், டாலர் வெளியே
ெசல்வது அதிகரிக்கும். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, தங்கத்தின்
விலை அதிகரிக்கும்.

சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்தநாட்டு 
கரன்சி மதிப்பு  குறையும். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட்அதிகரித்து, 
விலை ஏறும்.

தங்கத்தின் விலை அதிகமாக குறைந்தால், அதன் உற்பத்தியாளர்கள்     உற்பத்தியை குறைத்துவிடுவார்கள். இதனால் டிமாண்ட் அதிகரித்துவிலை 
அதிகரிக்கும். (உதாரணமாக 1990-ம் ஆண்டில் ஏற்பட்ட விலைவீழ்ச்சி)

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது, 
டாலரில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடுசெய்துவிடுவார்கள்.

ஹெட்ஜிங் என்று சொல்லப்படுகிற இந்த யுக்தியால் தங்கத்தின் 
விலைஉயரும்.

அமெரிக்காவின் ராணுவ செலவுகள் அதிகரிக்கும்போது டாலரின்மதிப்பு 
குறையும். எனவே, தங்கம் விலை ஏறும். 



 'தங்கம்' கடந்து வந்த பாதை
 கடந்த 80 ஆண்டுகளாக தங்கம் சந்தித்த விலையேற்றத்தை தற்போது அறிந்துக் கொண்டால், அடுத்த 80 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எங்கே போய் நிற்கும்? என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் தங்கம் விலை 1930-ல் ஆண்டு முதல்...

1930  - ரூ. 14,      
1935 - ரூ.  24,
1940  - ரூ. 28,
1945  - ரூ. 49,
1950  - ரூ. 79,
1955  - ரூ. 63,
1960  - ரூ. 88,
1965  - ரூ. 56,
1970  - ரூ. 147,
1975  - ரூ. 432,
1980  - ரூ. 1064,
1985  - ரூ. 1544,

1990  - ரூ. 2520,
1995  - ரூ. 3600,
2000  - ரூ. 3480,
2005  - ரூ. 4640,
2006  - ரூ. 7680,
2007  - ரூ. 7600,
2008  - ரூ. 9200,
2009  - ரூ. 10944,
2010  - ரூ. 12500,
2011  - ரூ. 21120,
2012  - ரூ. 22896 (டிச.26),


2005-10 ஆண்டுகளுக்கிடையே, வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய டேட்டாக்கள்..! Important Datas..!


'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’என்ற 
பழமொழி கமாடிட்டி சந்தைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.ஐரோப்பா பிரச்னை, வளைகுடா நாடுகளில் குண்டு வெடிப்பு என உலகளவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கமாடிட்டி சந்தையில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக அளவில் வெளியாகும் பல்வேறு டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவை. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள், சீனாவின் தொழில் உற்பத்தி தொடர்பான டேட்டாக்கள்  போல பலவகை டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையின் போக்கை தலைகீழாக திருப்பிப் போடும்.

எனவே, கமாடிட்டி டிரேடிங்கில் ஒருவர் வெற்றிகரமாக லாபம் சம்பாதிக்க
விரும்பினால், உலக அளவிலான டேட்டாக்களை  உடனுக்குடன் தெரிந்து
செயல் படுவது அவசியம். எந்தெந்த டேட்டாக்கள் எப்போது வருகின்றன?,
அவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இனிபார்ப்போம்.

முக்கிய டேட்டாக்கள்!

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அந்நாட்டின் வளர்ச்சி பற்றிய டேட்டாக்கள்

முக்கியமானவை. அந்த டேட்டாக்களின் பட்டியல் இதோ:

·                     வேலைவாய்ப்பு டேட்டா - மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
·                     ஜி.டி.பி. டேட்டா - மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.
·                     ஐ.எஸ்.எம். உற்பத்தி இண்டெக்ஸ் - மாதத்தின் முதல் வேலை நாள்.
·                     வர்த்தகப் பற்றாக்குறை டேட்டா - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·                     கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·                     புரொடக்ஷன் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·                     தொழிற்சாலை உற்பத்தி - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·                     ரீடெய்ல் விற்பனை - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·                     டியூரபிள் குட்ஸ் ஆர்டர் - மாதத்தின் கடைசி வாரம்.
·                     ஃபெடரல் வங்கி மீட்டிங் - ஆண்டுக்கு எட்டு முறை.
·                     அடிப்படை உலோகங்கள் இன்வென்டரி - தினமும்.
·                     குரூட் ஆயில் இன்வென்டரி - ஒவ்வொரு புதன்கிழமையும்.
·                     இயற்கை எரி வாயு இன்வென்டரி - ஒவ்வொரு வியாழக்கிழமையும்.



Trade Timings... & Trading Holidays...

Agri and Commodity Trade Session

Special Session:
Monday to Saturday: 9:45 a.m. to 9:59 a.m.
Special Session (order cancellation session) is held to cancel the pending orders prior to opening of market

Normal Session:
Monday through Friday: 10:00 a.m. to 11:30 p.m.
(up to 11:55 p.m. on account of day light savings typically between every November and March of the following year)

Saturdays: 10:00 a.m. to 2:00 p.m.
Agri-commodities are available for futures trading up to 5:00 p.m. whereas non agri-commodities (bullions, metals, energy products) are available up to 11:30 pm / 11.55pm.

Currency Trade Session 

Monday to Friday :  09:00 a.m.  to   05:00 p.m.


Eqity Trade Session

Asian Indexes   

            Index                                                    Country       
            Australia ASX All Ordinaries            Australia    
            Shanghai SE Composite Index       China          
            Hang Seng                                      Hong Kong   
            Mumbai Sensex                              India
            Nikkei 225                                       Japan  
            Taiwan TSEC 50 Index                   Taiwan          

North and South American Indexes      

            Index                                                  Country         
            Dow Jones Industrial Average        United States          
            S&P 500 Index                                United States
            Brazil Bovespa Stock Index             Brazil
            Canada S&P/TSX 60                       Canada         
            Santiago Index IPSA                       Chile 
            IPC                                                   Mexico  

European Indexes   

            Index                                                 Country          
            FTSE 100                                       England           
            Euronext 100                                  Europe 
            CAC 40                                           France 
            DAX                                                Germany
            Swiss Market Index                        Switzerland


Trading Holidays -2013 (MCX-NCDEX)

ParticularsDateDaysMorning Session
(10:00 AM to 05:00 PM)
Evening Session
(05:00 PM to 11:55 PM)
Id-E-Milad25-01-2013FridayClosedOpen
Republic Day26-01-2013SaturdayClosedN/A
Holi (2nd Day)27-03-2013WednesdayClosedOpen
Good Friday29-03-2013FridayClosedClosed
Ram Navami19-04-2013FridayClosedOpen
Mahavir Jayanti24-04-2013WednesdayClosedOpen
Maharashtra Day/ May Day (Labour Day)01-05-2013WednesdayClosedOpen
Buddha Pornima25-05-2013SaturdayClosedN/A
Ramzan ID (Id-Ul-Fitr)09-08-2013FridayClosedOpen
Independence Day15-08-2013ThursdayClosedClosed
Ganesh Chaturthi09-09-2013MondayClosedOpen
Gandhi Jayanti02-10-2013WednesdayClosedClosed
Idu’L Zuha (Bakri ID)16-10-2013WednesdayClosedOpen
Diwali (Laxmi Puja)03-11-2013SundayClosedMahurat Trading
Diwali – Balipratipada04-11-2013MondayClosedOpen
Moharum14-11-2013ThursdayClosedOpen
Christmas25-12-2013WednesdayClosedClosed

Trading Holidays 2013 International Markets

DateDays
1 JanuaryNew Year’s Day
21 JanuaryBirthday of Martin Luther King
18 FebruaryPresidents’ Day
29 MarchGood Friday
27 MayMemorial Day
4 JulyIndependence Day
2 SeptemberLabor Day
Columbus Day
Veterans Day
28 NovemberThanksgiving Day
25 DecemberChristmas Day
01 January 2014New Year’s Day 2013
Trading Holidays -2013 for International as well as Indian Markets. Commodity Trade Mantra provides the complete list of Trading Holidays for 2013 for International and Indian Commodity exchanges such as MCX and NCDEX.

1. முதலில் நீங்கள் ’’ முதலீட்டாளரா ?’’ அல்லது ’’தினசரி வர்த்தகரா?’’ என்பதை முடிவு செய்யவும்.....

2. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்... தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....

3. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்.....

4. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ( ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும் )

5. அதிகமாக டிரேடிங் செய்வதை தவிருங்கள்...

6. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ... உடனே கவர் செய்து விடுவார்கள் ..... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.....

7. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்....

8. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )

9. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்... தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்....

10. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ...

Commodity Market - ல 85% தோற்றவர்களே ... காரணங்கள் ...

01. Dealer - ஐ நம்பி பணம் கொடுத்து Trade செய்வது (or) பொறுப்பை ஒப்படைப்பது ...

02. அதிக Brokerage - இல் Trade செய்வது ...

03. ஒரே Trade - இல் அதிக இலாபத்தை எதிர்பார்ப்பது ...

04. A /c -ல் உள்ள Margin Amount - க்கும் மிகுதியான ஒன்றுக்கும் மேற்பட்ட Script - ல் Trading செய்வது ...

05. Position Manintain பண்ணுவது ...

06. Market Trend தெரியாமல் Trade செய்வது ...

07. Tips வாங்கி Trade செய்வது ...

08. பதற்றம் மற்றும் பயத்துடன் Trading -ல் இருந்து வெளியே வருவது ...

மேற்கண்ட காரணங்களை பின்பற்றாமல் ... Commodity Market -ல் தினசரி இலாபம் ஈட்ட ... வழிவகைகள் தெரிந்து கொள்ள ... நமது இந்தியாவில் எங்கிருந்து கொண்டும் Online மூலம் Trading செய்திட ... அழைக்கவும் ...

வாழ்க! வளமுடன்!! தாழ்ந்தால் வாடாதே ! உயர்ந்தால் ஆடாதே !! கமாடிட்டி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது ...