முதலில் கம்மாடிட்டி வர்த்தக சேவை தரும் ப்ரோகிங்(Broking) நிறுவனத்தை அணுகி உங்கள் பெயரில் ஒரு அக்கௌன்ட் (Account) துவங்க வேண்டும். இதை துவங்க பான் கார்டு அவசியம். மேலும் ஏதேனும் ஒரு வங்கியில் துவங்கியிருக்க வேண்டும். (ICICI, HDFC, AXISபோன்ற தனியார் வங்கி கணக்குகள் சிறப்பானவை)
*பான் கார்டு நகல் வேண்டும்
*உங்கள் முகவரி சான்று நகல் வேண்டும்
*இரண்டு புகைப்படம் போதுமானது
*இரண்டு செக் லீப் ஒன்று கேன்சல் செய்யப்பட்டது மற்றொன்று முதலீடு
இவற்றை அவர்களிடம் அளித்தால், அவர்கள் உங்களிடம் துவங்குவதர்க்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்று அதனை செயலாற்றி உங்களுக்கென ஒரு வாடிக்கையாளர் அடையாள எண் வழங்குவார்கள். அந்த எண் தான் உங்கள் Accountதுவங்கப்பட்டதர்க்கான அத்தாட்சி.
5 தினங்களுக்குள் இந்த முறையில் துவங்கி தருவார்கள். இந்த அடையாள எண் வைத்து அவர்களிடம் சந்தை வர்த்தகம் செய்து லாபம் பார்க்கலாம்.