மார்ஜின் தொகை என்பது ஒரு பொருளை வாங்குவதற்கு நம் கணக்கில் இருக்க்க வேண்டியகுறைந்தபட்ச தொகை ஆகும்.
இந்த குறைந்தபட்ச தொகை நம் கணக்கில் இருந்தால் தான் நாம் அப்பொருளை வாங்கவோ விற்கவோ முடியும்.
உதாரணத்திற்கு 04.01.12 நிலவரப்படி தங்கம் 1 லாட்(lot) வாங்க வேண்டுமானால் உங்கள்கணக்கில் ரூ.1,20,000 இருந்தால் போதுமானது. தங்கம் 1 லாட்டின் மொத்த மதிப்பு ரூ. 32,40,000ஆகும். ஆனால் அதுவும் நமது ப்ரோகிங் நிறுவனத்தில் ரூ. 20,000 உங்கள் கணக்கில் இருந்தால் கூடபோதுமானது. மீத தொகையை நம் ப்ரோகிங் நிறுவனமே எச்போசர் (exposure) என்ற வகையில் நம்கணக்கில் அளித்து நமக்கு வர்த்தகம் நடைபெற அனுமதியளிக்கும்.
அதே போல் வெள்ளி 1 லாட் வாங்கவோ விற்கவோ நம் கண்ணக்கில் ரூ. 15,000 இருக்கவேண்டும், மார்ஜின் தொகையான ரூ. 90,000 மீதி ரூபாயை நமது ப்ரோகிங் நிறுவனமே கணக்கில்எச்போசர் என்ற வகையில் நம் கணக்கில் அளித்து நாம் வர்த்தகம் செய்ய உதவும்.
ஆனால் 1 லாட் வெள்ளி என்பது 30 கி கி(Kg) ஆகும். 30 கி கீ வெள்ளியின் மொத்த மதிப்பு ரூ.18,45,000 அளவில் இருக்கும். நம் கையில் குறைந்த மார்ஜின் பணம் மட்டும் இருந்தாலே, பல லட்சம்மதிப்புள்ள தங்கத்தையோ வெள்ளியையோ நாம் வாங்கவோ விற்கவோ முடியும்.
அதில் வரும் லாபம் அனைத்தும் நமக்கே சொந்தம் ப்ரோகிங் நிறுவனம் வெறும் கமிஷனை()மட்டுமே எடுத்துக்கொள்ளும்.