தங்கத்தில் டிரேட் செய்கிறவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியவை...
முக்கிய நாடுகள், அதன் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவது
அல்லது விற்பது.
தங்கத்தை உற்பத்தி செய்யும் முன்பே சுரங்க உற்பத்தியாளர்கள்
ஹெட்ஜ் செய்வது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது.
பங்குச் சந்தையின் செயல்பாடுகள்.
விவசாயம் , காலநிலையைப் பொறுத்து உள்நாட்டில் டிமாண்ட்ஏற்படுவது.
அமெரிக்காவின் ஜி.டி.பி. குறைந்தால் அந்த நாட்டின் வட்டி விகிதமும்
குறையும். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகமாக இருக்கும்.
முதலீடு அதிகமாகும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
அமெரிக்காவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தால், டாலர் வெளியே
ெசல்வது அதிகரிக்கும். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, தங்கத்தின்
விலை அதிகரிக்கும்.
சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகரிக்கும்போது அந்தநாட்டு
கரன்சி மதிப்பு குறையும். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட்அதிகரித்து,
விலை ஏறும்.
தங்கத்தின் விலை அதிகமாக குறைந்தால், அதன் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைத்துவிடுவார்கள். இதனால் டிமாண்ட் அதிகரித்துவிலை
அதிகரிக்கும். (உதாரணமாக 1990-ம் ஆண்டில் ஏற்பட்ட விலைவீழ்ச்சி)
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும்போது,
டாலரில் இருக்கும் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடுசெய்துவிடுவார்கள்.
ஹெட்ஜிங் என்று சொல்லப்படுகிற இந்த யுக்தியால் தங்கத்தின்
விலைஉயரும்.
அமெரிக்காவின் ராணுவ செலவுகள் அதிகரிக்கும்போது டாலரின்மதிப்பு
குறையும். எனவே, தங்கம் விலை ஏறும்.
கடந்த 80 ஆண்டுகளாக தங்கம் சந்தித்த விலையேற்றத்தை தற்போது அறிந்துக் கொண்டால், அடுத்த 80 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எங்கே போய் நிற்கும்? என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் தங்கம் விலை 1930-ல் ஆண்டு முதல்...
1930 - ரூ. 14,
1935 - ரூ. 24,
1940 - ரூ. 28,
1945 - ரூ. 49,
1950 - ரூ. 79,
1955 - ரூ. 63,
1960 - ரூ. 88,
1965 - ரூ. 56,
1970 - ரூ. 147,
1975 - ரூ. 432,
1980 - ரூ. 1064,
1985 - ரூ. 1544,
1990 - ரூ. 2520,
1995 - ரூ. 3600,
2000 - ரூ. 3480,
2005 - ரூ. 4640,
2006 - ரூ. 7680,
2007 - ரூ. 7600,
2008 - ரூ. 9200,
2009 - ரூ. 10944,
2010 - ரூ. 12500,
2011 - ரூ. 21120,
2012 - ரூ. 22896 (டிச.26),
2005-10 ஆண்டுகளுக்கிடையே, வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'தங்கம்' கடந்து வந்த பாதை
ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் தங்கம் விலை 1930-ல் ஆண்டு முதல்...
1930 - ரூ. 14,
1935 - ரூ. 24,
1940 - ரூ. 28,
1945 - ரூ. 49,
1950 - ரூ. 79,
1955 - ரூ. 63,
1960 - ரூ. 88,
1965 - ரூ. 56,
1970 - ரூ. 147,
1975 - ரூ. 432,
1980 - ரூ. 1064,
1985 - ரூ. 1544,
1990 - ரூ. 2520,
1995 - ரூ. 3600,
2000 - ரூ. 3480,
2005 - ரூ. 4640,
2006 - ரூ. 7680,
2007 - ரூ. 7600,
2008 - ரூ. 9200,
2009 - ரூ. 10944,
2010 - ரூ. 12500,
2011 - ரூ. 21120,
2012 - ரூ. 22896 (டிச.26),
2005-10 ஆண்டுகளுக்கிடையே, வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை சுமார் 3 மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.