'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’என்ற
பழமொழி கமாடிட்டி சந்தைக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.ஐரோப்பா பிரச்னை, வளைகுடா நாடுகளில் குண்டு வெடிப்பு என உலகளவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கமாடிட்டி சந்தையில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலக அளவில் வெளியாகும் பல்வேறு டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவை. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள், சீனாவின் தொழில் உற்பத்தி தொடர்பான டேட்டாக்கள் போல பலவகை டேட்டாக்களும் கமாடிட்டி சந்தையின் போக்கை தலைகீழாக திருப்பிப் போடும்.
எனவே, கமாடிட்டி டிரேடிங்கில் ஒருவர் வெற்றிகரமாக லாபம் சம்பாதிக்க
விரும்பினால், உலக அளவிலான டேட்டாக்களை உடனுக்குடன் தெரிந்து
செயல் படுவது அவசியம். எந்தெந்த டேட்டாக்கள் எப்போது வருகின்றன?,
அவற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இனிபார்ப்போம்.
முக்கிய டேட்டாக்கள்!
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அந்நாட்டின் வளர்ச்சி பற்றிய டேட்டாக்கள்
முக்கியமானவை. அந்த டேட்டாக்களின் பட்டியல் இதோ:
·
வேலைவாய்ப்பு டேட்டா - மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
·
ஜி.டி.பி. டேட்டா - மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.
·
ஐ.எஸ்.எம். உற்பத்தி இண்டெக்ஸ் - மாதத்தின் முதல் வேலை நாள்.
·
வர்த்தகப் பற்றாக்குறை டேட்டா - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·
கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·
புரொடக்ஷன் பிரைஸ் இண்டெக்ஸ் - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·
தொழிற்சாலை உற்பத்தி - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·
ரீடெய்ல் விற்பனை - மாதத்தின் மூன்றாவது வாரம்.
·
டியூரபிள் குட்ஸ் ஆர்டர் - மாதத்தின் கடைசி வாரம்.
·
ஃபெடரல் வங்கி மீட்டிங் - ஆண்டுக்கு எட்டு முறை.
·
அடிப்படை உலோகங்கள் இன்வென்டரி - தினமும்.
·
குரூட் ஆயில் இன்வென்டரி - ஒவ்வொரு புதன்கிழமையும்.