இன்றைக்கு கமாடிட்டி சந்தை போல, கரன்சி சந்தையிலும் டிரேடிங் செய்து லாபம் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிக ஏற்ற, இறக்கம் இல்லாத சந்தை இது என்பதால், பலரும் இதில் இறங்கி லாபத்தைச் சுவைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இத்தனைக்கும் இந்தியாவில் கரன்சி சந்தை வர்த்தகம் ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள்தான் ஆகிறது. 2008-ல்தான் முதன்முதலாக இந்தியாவில் கரன்சி டெரிவேட்டிவ் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 ரூபாயைத் தாண்டியபோதுதான் கரன்சி வர்த்தகத்தின் மீது பலருக்கும் ஆர்வம் பிறந்தது.
அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட், யென் ஆகிய நான்குவகையான கரன்சிகளை நம்மூரில் வர்த்தகம் செய்யமுடியும். இந்தியாவில் நடக்கும் கரன்சி வர்த்தகத்தில் சுமார் 85 சதவிகிதம் டாலரில் மட்டுமே நடக்கிறது. இதற்கு காரணம், டாலர் வர்த்தகத்தில் மட்டும்தான் ஆப்ஷன் நடக்கிறது. மற்ற நாடுகளில் 24 மணி நேரம் கரன்சி வர்த்தகம் நடந்தாலும் நம்மூரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கரன்சி வர்த்தகம் செய்யமுடியும்.
சிறுமுதலீட்டாளர்களும் செய்யலாம்!
சிறுமுதலீட்டாளர்கள் கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இந்த சந்தையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. கரன்சி சந்தையின் வர்த்தகம் பெரும்பாலும் செய்தியைப் பொறுத்துதான் இருக்கும். வதந்திகள் இல்லை என்பதால், அதிக ஏற்ற, இறக்கம் இருக்காது. கமாடிட்டி வர்த்தகம்கூட சப்ளை-டிமாண்டை பொறுத்து விலை மாறுபடும். ஆனால், கரன்சி சந்தையில் செய்திகள் மட்டுமே விலையை நிர்ணயிக்கும்.
பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைகளோடு ஒப்பிடும்போது கரன்சி சந்தையில் குறைவான மார்ஜின் செலுத்தினால் போதும். இதன் மார்ஜின் தொகை சுமார் 3 சதவிகிதம்தான். மேலும், கரன்சி சந்தையில் பெரிய அளவுக்கு ஏற்ற இறக்கம் இருக்காது. 2010-ல் சுமார் 5 பைசா என்ற அளவில்தான் ஏற்ற, இறக்கம் இருந்தது. இது இப்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது இச்சந்தையின் வால்யூமும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
எவ்வளவு லாபம்?
ஒரு லாட் என்பது 1,000 டாலர்கள். ஒரு டாலர் 56 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், 56,000 ரூபாய் ஒரு லாட். இதில் சுமார் 3 சதவிகிதம் அளவுக்கு மட்டும் மார்ஜின் செலுத்தினால் போதும். ஒரு பைசா உயர்ந்தால் 10 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை லாட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி, விற்கலாம். ஒரு நாளைக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். இதில் ரிஸ்க் குறைவு என்பதினால் கிடைக்கும் லாபமும் குறைவாகவே இருக்கும்.
கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்கவேண்டும் ...
இதில் மார்ஜின் தொகை குறைவு என்பதால் கையில் இருக்கும் தொகை முழுவதற்கும் பொசிஷன் எடுக்கக்கூடாது.
மேலும், ஸ்டாப்லாஸ் போடாமல் பலரும் வர்த்தகம் செய்கிறார்கள். இதனால் அதிக இழப்பு வரலாம்.
உலக நிலவரங்கள், முக்கியமான டேட்டாக்கள் எப்போது வருகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்கத்துக்கும், கரன்சிக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு மட்டும் வர்த்தகம் செய்தாலும், கிராஸ் கரன்சி என்று சொல்லக்கூடிய மற்ற நாணயங்களும் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோ கடுமையாக சரிந்தது. இதனால் அமெரிக்க டாலர் பலமடைந்தது. இந்த பலம் இந்திய ரூபாயின் வர்த்தகத்திலும் பாதிப்படைந்தது. அதனால் உலக விஷயங்களையும் தொடர்ந்து அப்டேட் செய்ய வேண்டும்.
புதிய வாய்ப்பைத் தேடுகிறவர்கள் இதையும் ஒரு கைபார்க்கலாமே!