இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு முதல் முன்பேர வர்த்தக சந்தை (commodity) வணிகம் நடைபெற்று வருகிறது. இதனை பார்வேர்ட் மார்கெட் கமிஷன் (FMC) என்ற அரசு ஆணையம் கண்காணித்து முதலீட்டாளர்களை பாதுகாக்கிறது.
கமாடிட்டி சந்தை என்பது முன்பேர பொருள் வர்த்தகம் ஆகும். கமாடிட்டி சந்தையில் ஒரு வர்த்தகமாகும் பொருளின் உற்பத்தி, தேவை, அளவு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அப்பொருளின் விலை ஏற்றம் பெறும் என கணித்து வாங்கி வைப்பதும் அல்லது விலை இறக்கம் அடையும் என கணித்து விற்று வைத்தும், அந்தந்த பொருளின் ஒப்பந்த முடிவு தேதி வறையிலும் காத்திருந்து (or) லாபம் கிடைக்கும் எந்த நாளிலும் (ஒப்பந்த காலத்திற்குள்) கணக்கை நேர் செய்தல். அதாவது வாங்கி வைத்திருந்தால் விற்றும் (or)விற்று வைத்திருந்தால் வாங்கியும் ஒப்பந்த்தை நேர் செய்தல்.