மார்ஜின்(Margin) தொகையை மட்டும் முதலீடாக செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம், விற்கலாம்.
ஒரு பொருள் விலை அதிகமாக இருக்கிறது பின்னர் விலை குறைய வாய்ப்புள்ளது என்று கணித்தால் முதலிலேயே அப்பொருளை விற்று வைக்கலாம் பிறகு அப்பொருள் விலை குறைந்ததும் வாங்கி கணக்கை நேர் செய்யலாம்
அல்லது
ஒரு பொருள் விலை குறைவாக இருக்கிறது. விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சந்தை நிலவரத்தை வைத்து கணித்தால் அப்பொருளை வாங்கலாம், வாங்கிய பிறகு எந்த நிமிடமும் (or) நொடியும் அந்த பொருளின் விலை அதிகரிக்கலாம் அதிகரித்த அந்த நொடியே கூட விற்று லாபமடையலாம் இன்னும் இன்னும் விலை ஏற வாய்ப்புள்ளது என
நினைத்தால் காத்திருந்து நீங்கள் அடைய விரும்பும் விலை இலக்கை அடைந்ததும் விற்கலாம்.
கமாடிட்டி சந்தையில் 200க்கும் அதிகமான பொருள்கள் வர்த்தகமாகின்றன சந்தையில் விற்பனையாகும்
*ஒரு பொருளின் உற்பத்தி குறைந்தால் விலை அதிகரிக்கவே வாய்ப்பு
*ஒரு பொருளின் உற்பத்தியும் அதிகரித்து வரத்தும் அதிகரித்தல் விலை குறையவே வாய்ப்பு.
*தங்கம், வெள்ளி, காப்பர், அலுமினியம், கச்சா எண்ணெய் போன்ற முக்கியமான பொருட்கள் உலக சந்தை விலை நிலவரத்திற்கு ஏற்பவே வணிகமாகும்.
*தங்கம், வெள்ளி பெரும்பாலும் அமெரிக்க சந்தையின் நிலவரம் பொறுத்தே வர்த்தகமாகும்.
* காப்பர் மாற்றும் பேஸ் மெடல் (base metal)போன்றவை சீனா லண்டன் சந்தை விலை நிலவரம் பொறுத்தே வர்த்தகமாகும்.
அதே போல வர்த்தாகம் மாதம் 2 மாதம் என்ற ஒப்பந்த கால அடிப்படையிலேயே நடைபெறும் 1 மாத ஒப்பந்தத்தில் ஒரு பொருளை வாங்கினாலோ அல்லது விற்றாலோ அந்த மாத இறுதி வர்த்தக நாளன்று அப்பொருளை வாங்கி இருந்தால் விற்று கணக்கை நேர் செய்து விட வேண்டும். விற்று இருந்தால் வாங்கியும் கணக்கை நேர் செய்து விட வேண்டும்.
அல்லது
வாங்கிய பொருளுக்கு உண்டான தொகையை செலுத்தினால் அப்பொருள் உங்களுக்கு டெலிவரி செய்வார்கள்.
மற்றபடி எந்த கட்டுப்பாடும் இல்லை சந்தை ஏற்றும் மற்றும் இறக்கம் நம்முடையது இதற்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது.