இதெல்லாம் சரிதான் எனக்கு எந்த பொருள் என்ன விலைக்கு அதிகரிக்கும் () குறையும் என்றுகணிக்க தெரியவில்லை. மேலும் எதை எப்போது வாங்குவது விற்பது என்பதும் தெரியவில்லை என்னசெய்ய?
இதற்கு நீங்கள் கணக்கு துவங்கியுள்ள ப்ரோகிங் நிறுவனத்திலேயே தினம் பாரிந்துரைதருவார்கள். இன்ன பொருள் இன்று இந்த விலைக்கு போகும் இன்ன விலையில் வாங்கலாம், இன்னவிலையில் விற்கலாம் என்று தகவல் தருவார்கள் அதை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம்.
இல்லையெனில் பல தனியார் அட்வைசரி(advisory) நிறுவனங்களில் கட்டணம் செலுத்திபரிந்துரை(tips) வாங்கலாம். இதற்கு கடந்த காலத்தில் நல்ல லாபத்தை பெற்று கொடுத்தநிறுவனத்தில் சந்தாதாரர் ஆகி, அவர்களிடம் பரிந்துரை பெற்று வர்த்தகம் செய்யலாம்.
இவர்கள் கீழ்கண்டவாறு பரிந்துரை தருவார்கள்
GOLD BUY-30,180 SILVER SELL- 61,082
TGT(TARGET) 1- 30,230 TGT(TARGET) 1- 59,000
TGT 2- 30,280 TGT 2- 58,500
TGT 3- 30,380 TGT 3- 58,000
SL(STOP LOSS)- 30,130 SL(STOP LOSS)- 61,150
இதில் கோல்ட் வாங்க சொல்லி இருகிறார்கள் கோல்ட் 30, 180 என்ற விலைக்கு வரும் வரை காத்திருந்து 1 லாட் வாங்க வேண்டும்
நட்டத்தை குறைக்கும் அளவில் மேலுள்ள தொகையில் வாங்கிய விலை ரூ. 30,180 விட குறைந்து ரூ. 30,129 அளவில் சென்றால் உடனே விற்று நட்டத்தை அதோடு நிறுத்தி விட வேண்டும். இதுவே ஸ்டாப் லாஸ் (Stop loss).
ஸ்டாப் லாஸ் அளவை கடந்தால் மேலும் சந்தை சரியவே வாய்ப்பு என்பதை கணித்து தான் அந்த அளவில் இந்த தொகை ஸ்டாப் லாஸ் என்று முடிவு செய்து பரிந்துரை அளிப்பார்கள். முடிவு செய்து வெளியேறுவது புத்திசாலித்தனம் மட்டுமல்ல மேலும் மேலும் ஏற்படும் நஷ்டத்தை குறைத்து கொள்ள முடியும்.
3 டார்கெட் வரை இலக்கை அடைவது எப்படி? கோல்ட் ரூ. 30, 180 ஒரு லாட் வாங்கிவிட்டீகள் இப்போது விலை ஏற்றத்திற்காக காத்திருக்க வேண்டும் *ஸ்டாப் லாஸ் தொகையாக ரூ. 30,130 வைத்துக்கொள்ளவும்
*விலை 1 30 230 அடைந்ததும் ஸ்டாப் லாஸ் தொகையாக 30 180 ஐ வைத்துக்கொள்ளவும் ()
* விலை ஏற்றத்திற்காக மீண்டும் காத்திருக்க வேண்டும் விலை 2 ஐ 30 280 ஐ அடைந்த்ததும் ஸ்டாப் லாஸ் தொகையாக ரூ. 30,230 ஐ வைத்துக்கொள்ள வேண்டும் ()
*மீண்டும் விலை ஏற்றத்திற்கு காத்திருக்க வேண்டும்.
விலை TGT-3 ஐ அடைந்த்ததும் (புக் புல் ப்ரோபிட்) விற்று முழு லாபம் அடையலாம்.
இதே போல் (சில்வர்) வெள்ளியை 61 082 ரூ வர்த்தகமாகும் பொது 1 லாட் விற்க வேண்டும் இலக்கு .1-59 000... இலக்கு.2-58 500...இலக்கு.3-58 000...
*61 082 இல் வெள்ளியை 1 லட் விற்று விட்டீர்கள் இப்போது விலை குறைவதற்காக காத்திருக்க வேண்டும்
*விலை TGT 1- 59, 000 ஐ அடைந்தாதும் ஸ்டாப் ல ஆகா 61 082() வைத்து கொள்ளவேண்டும்.
மேலும் குறைய காத்திருந்து *விலை 2- 58,500 ஐ அடைந்ததும் ஸ்டாப் லாஸ் ஆகா 59,000 () வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் விலை குறைய காத்திருந்து * விலை 3- 58,000 ஐ அடைந்த்ததும் () விற்று முழு லாபத்தையும் அடைய வேண்டும். *